Advertisment

மாணவனை காலை பிடித்து விட பணித்த ஆசிரியர்; வெளியான அதிர்ச்சி காட்சி

The teacher ordered the student to hold his leg; Shocking scene released

சிலஅரசுப் பள்ளிகளில் பள்ளி மாணவர்களாலேயே பள்ளியின் கழிவறை தூய்மைப்படுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து அது தொடர்பான புகார்களும் எழுதுகிறது. இந்நிலையில் அதேபோல் சேலத்தில் பள்ளி மாணவன் ஒருவர் தரையில் அமர்ந்தபடி ஆசிரியரின் கால்களை பிடித்து விடும் வீடியோ காட்சி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் பகுதியில் உள்ளது கிழக்கு ராஜபாளையம். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயபிரகாஷ். இவர் வகுப்பு இல்லாத நேரத்தில் மாணவர்களை கூப்பிட்டு காலை அமுக்கி விட சொல்வதாக மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் ஜெயபிரகாஷ் இருக்கையில் அமர்ந்திருக்க கீழே இருபுறமும் தரையில் அமர்ந்திருந்த இரண்டு மாணவர்கள் கால்களை அமுக்கி விடும் வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் முறையாக பாடம் எடுக்காமல் அடிக்கடி வகுப்பறையிலேயே ஆசிரியர் ஜெயபிரகாஷ் தூங்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

Advertisment
Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe