Advertisment

ஆசிரியரின் இழிவான செயல்; பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

Teacher misbehaves with class 11 student during public examination

தமிழ்நாடு முழுவதும் 12 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காகதேர்வுகளில் அவர் செல்வதை வேறு ஆசிரியர் எழுதும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் 11 ஆம்வகுப்பு பொதுத் தேர்வு எழுத வந்த மாற்றுத் திறனாளி மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் அந்த மாற்றுத் திறனாளி மாணவி11 ஆம் வகுப்பு தனித் தேர்வு எழுத வந்துள்ளார். அப்போது மாணவி மாற்றுத் திறனாளி என்பதால் தனியறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுதி வந்த நிலையில் தேர்தல் அலுவலரான ஆசிரியர் ஜெகன்நாத் மாணவி தேர்வு எழுத உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத்தெரிகிறது.

Advertisment

தேர்வு எழுதி முடித்த கையோடு வீட்டிற்குச் சென்ற அந்த மாணவி, தனக்கு தேர்வு எழுத உதவி செய்த ஜெயகன்நாத் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசில்புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் ஆசிரியர் ஜெகன்நாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

arrested police student
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe