teacher misbehaved with the 6th class girl

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த கோரைக்குப்பம் மீனவ கிராமத்தில் இயங்கி வரும் நடுநிலைப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு தற்காலிக ஆசிரியர் இளஞ்செழியன்(50) என்பவர் பாலியல் தொல்லை தந்தாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து மீனவ மக்கள் பள்ளிக்கு வந்து தற்காலிக ஆசிரியர் இளஞ்செழியனுக்கு தர்ம அடி கொடுத்து வகுப்பறையில் வைத்துப் பூட்டினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போலீசார் வகுப்பறையில் பூட்டப்பட்ட தற்காலிக ஆசிரியரை மீட்டு காட்டூர் காவல் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

6ஆம் வகுப்பு மாணவிக்கு தற்காலிக ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி தர்ம அடி கொடுத்து வகுப்பறையில் பூட்டிய சம்பவம் மீனவ கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.