/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_143.jpg)
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், அங்கிருக்கும் கல்லூரி ஒன்றில் ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்துவந்துள்ளார். படிப்பு காலத்தில் கல்லூரி நிர்வாகம் இவரை போன்ற B.ed படிக்கும் மாணவ மாணவிகளை அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் சென்று பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கச் சொல்வது வழக்கம். அப்படி மேற்படி பெண் ஆசிரியை அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில்மாணவ மாணவிகளுக்கு தற்காலிக ஆசிரியையாக இருந்து பாடம் நடத்திவந்தார். இந்நிலையில் அந்த ஆசிரியைக்கும், அந்தப் பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவன் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அது வளர்ந்து இருவருக்கும் இடையே காதலாகியுள்ளது.
இந்த தகவல் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவரவே இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்த நிலையில் மாணவனைப் பிரிய மனமில்லாத ஆசிரியை, கடந்த அக்டோபர் மாதம் அம்மாணவனை திருமணம் செய்துகொண்டு பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மாணவனின் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
திருமண கோலத்தில் பார்த்த மாணவன் உறவினர்கள் அவரவர் பெற்றோருக்கு தகவல் சொல்ல, அவர்கள் வந்து இருவரையும் திட்டி சண்டை போட்டுள்ளனர். இருவருக்கும் திருமண வயது பொருந்தாது என்று எடுத்துக்கூறி இருவருக்கும் புத்திமதி கூறி உள்ளனர். ஆனால் மாணவனும் ஆசிரியையும் பிரிய மனமில்லாமல் இருவரும் ஒரே நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதைக் கண்டு பதறிப்போன அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் அவர்கள் இருவரையும் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்குச் சேர்த்தனர். இருவரும் உடல் நலம் தேறி வீடு திரும்பினர்.
அச்சிறுவனின் தந்தை, குன்னம் போலீஸில் ஆசிரியை மற்றும் தனது மகனின் காதல் கல்யாண விவகாரம் குறித்து புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் 17 வயது மாணவனை இருபத்தொரு வயது பெண் காதல் கல்யாணம் என்று அழைத்துச் சென்றது சட்டத்திற்குப் புறம்பானது அந்த அடிப்படையில் அந்த ஆசிரியை மீது போக்ஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)