Teacher

பள்ளி மாணவிகளுக்கு பாலியரல் தொந்தரவு செய்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து உடற்கல்வி ஆசிரியர் தலைமறைவானார்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒட்டன்சத்திரம் தும்மிச்சம் பட்டியைச் சேர்ந்த ராஜேஸ் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் உடற்கல்வி ஆசிரியராக பணி செய்து வருகிறார்.

Advertisment

இவர் அதே பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகளை அத்துமீரி தொடக்கூடாத இடங்களில் தொட்டதாக குழந்தைகளிடமிருந்து புகார் பெறப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சீலன்ஸ்டீபன் மற்றும் தாளாளர் ஜேக்கப்தாமஸ் ஆகியோர் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறை ஆய்வாளர் கீதா விசாரணை செய்ததில் உடற்கல்வி ஆசிரியர் ராஜேஸ் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.

Advertisment

இதன் பேரில் வழக்குப்பதிவு செய்ததில் உடற்கல்வி ஆசிரியர் ராஜேஸ் தலைமறைவானார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜேஸ் மனைவி அதே பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தவரை நேற்று முதல் பள்ளிக்கு வரவேண்டாமென நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.