Advertisment

திருமணத்தை மீறிய உறவு; ஆண் நண்பருடன் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு

 teacher lost their life along with her boyfriend

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் மோகன்ராஜ் - கீர்த்தனா தம்பதியினர். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். மோகன் ராஜ் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில் அவரது மனைவி கீர்த்தனா தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

Advertisment

காட்டுப்புத்தூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(29). ஐ.டி.ஐ படித்து முடித்துவிட்டு விவசாய வேலைகளைப் பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கீர்த்தனா பள்ளிக்குச் சென்று வரும் போது கிருஷ்ணமூர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதன் காரணமாக, இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் இவர்களது திருமணத்தை மீறிய உறவு இருவர் வீட்டிற்குத் தெரியவந்துள்ளது. இதனால் அவமானமடைந்த கிருஷ்ணமூர்த்தியும் கீர்த்தனாவும் அந்த பகுதியில் உள்ள ஒரு மோட்டார் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்தை மீறிய உறவு வெளியே தெரிந்ததால், அவமானம் தாங்கமுடியாமல் இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

trichy woman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe