Teacher impregnates student who came home with a relative

Advertisment

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை ராம்நகர் அரசு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ்(47). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஆனால் சில காரணங்களுக்காக ஆசிரியர் ஆரோக்கியதாஸ் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஆரோக்கியதாஸ் வீட்டிற்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் விடுமுறையின் காரணமாக வந்து தங்கியுள்ளார். ஆரோக்கியதாஸின் மனைவியும் ஆசிரியர் என்பதால், அவர் தினமும் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ஆரோக்கியதாஸ் வீட்டில் இருந்த உறவுக்கார சிறுமியிடம் நெருங்கிப் பழகி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஆரோக்கியதாஸ் வீட்டில் இருந்து தனது பெற்றோரின் வீட்டிற்குச் சிறுமி சென்றுள்ளார். அப்போது சிறுமியின் நடவடிக்கை மற்றும் உடல்நிலையில் மாறுதல் இருந்ததைக் கவனித்த பெற்றோர், அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது ஆசிரியர் ஆரோக்கியதாஸ் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதை விவரித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Advertisment

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தேவைக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் போரில் போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆரோக்கியதாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.