71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய வரைபடத்தை உதட்டுச்சாயம் மூலம் முத்தமிட்டு முத்தமிட்டு வரைந்த ஓவிய ஆசிரியர்இந்தியாவில் 71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் அரசு அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்கள்,மாநில தலைமைச் செயலகங்கள்,டெல்லி செங்கோட்டை வரை இந்திய குடியரசு தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

teacher draw A  Indian map with lips

Advertisment

ஒரு பள்ளி ஆசிரியர் மிக வித்தியாசமான முறையில்குடியரசு தினத்தை கொண்டாடியுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது சிவனார் தாங்கல் கிராமம் இவ்வூரில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இன்றைக்கு நாட்டின் 71 ஆவதுகுடியரசுதினத்தை முன்னிட்டு இன்று விழா நடைபெற்றது. அந்த விழாவின்போது இப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணி செய்து வரும்செல்வம் தனது உதட்டில் சிவப்பு சாயத்தை ஒற்றி எடுத்து அதை அப்படியே மிகப்பெரிய போர்டில் தன் உதட்டால்ஒற்றி அதனை இந்திய வரைபடமாக உருவாக்கி அசத்தியுள்ளார்.

Advertisment

இதை பார்த்து சக ஆசிரியர்கள், மாணவர்கள்,ஊர்மக்கள், ஆசிரியர் செல்வத்தை பெரிதும் பாராட்டினார்கள். எல்லோரும் சம்பிரதாயப்படி இந்திய குடியரசு தின விழாவை கொண்டாடும் நிலையில் ஆசிரியர் செல்வத்தின் இந்த வினோத முயற்சி பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.