Advertisment

பள்ளி மாணவனிடம் காதல் சில்மிஷம் - ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது

hjkl

Advertisment

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆசிரியர்கள் மாணவிகளிடம் தவறாக நடந்ததால் தொடர்ந்து கைது செய்யப்பட்டுவருகிறார்கள். சிலர் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்கள். வேறு சில மாணவிகள் அதனை எப்படி வெளியே கூறுவதெனத் தெரியாமல் தங்களின் உயிரைக் கடிதங்கள் எழுதி வைத்துக்கொண்டு மாய்த்துக் கொள்கிறார்கள். குறிப்பாக கோவை மாணவி தற்கொலைக்குப் பிறகு அடுத்தடுத்த நாட்களில் 5க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியர்களின் தவறான அணுகுமுறையால் தற்கொலை செய்துகொண்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க, பெண் ஆசிரியர் ஒருவர் 10வகுப்பு மாணவனிடம் தவறாக நடந்துகொண்டதால்அந்த மாணவன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் அம்பாபூரில் 10ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனிடம் அப்பள்ளி ஆசிரியர் ராசாத்தி காதல் என்ற பெயரில் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் பெற்றோரிடம் கூறவே, அவர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்கள். புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராசாத்தியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளார்கள்.

arrest teachers
இதையும் படியுங்கள்
Subscribe