
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் 13ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை தேசியக் கொடிகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். மேலும் வீடுகளில் ஏற்றப்படும் தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து Har Ghar Tiranga என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், மக்கள் என பல தரப்பிலிருந்து பலரும் தேசியக் கொடியை ஏற்றி செல்ஃபி எடுத்து பதிவேற்றி இருந்தனர்.

இந்நிலையில் திருப்பூரில் 'இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும்' என தேசியக் கொடியில் எழுதி வீட்டில் பறக்கவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் எபின் என்பவர் சர்ச்சைக்குரிய வாசகத்தை தேசியக் கொடியில் எழுதி பறக்கவிட்டுள்ளதாக அக்கம்பக்கத்தினர் புகாரளிக்க, தேசியக் கொடியை அவமதித்தற்காக எபினை போலீசார் கைது செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)