Skip to main content

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் கைது!

Published on 13/11/2021 | Edited on 16/11/2021

 

Teacher arrested in Coimbatore school student case

 

கோவையில் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்று காவல்துறை கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

கோவை மாவட்டம், உக்கடம் பகுதி, கோட்டைமேடு அடுத்த பெருமாள் கோவில் வீதி பகுதியில் வசித்து வருபவர் மகுடீஸ்வரன். பலகார மாஸ்டராக இவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள்,  கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். கரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் மட்டுமே பெரும்பாலான வகுப்புகள் நடைபெற்று வந்தது.

 

kovai

 

ஆன்லைன் வகுப்பிற்காகப் பெற்றோர்கள் மாணவிக்கு செல்ஃபோன் வாங்கி கொடுத்துள்ளனர். செல்போன் மூலம் அவர் வகுப்புகளைக் கவனித்து வந்தார். அப்போது இயற்பியல் ஆசிரியர் வகுப்பு  நேரம் போக மற்ற நேரங்களில் செல்ஃபோன் மூலம் பேசி வந்துள்ளார். மேலும் அம்மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அம்மாணவி மனமுடைந்த நிலையிலிருந்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவி, கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த உக்கடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை மற்றும் தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்