Advertisment

40 பேரை ஏமாற்றிய ஆசிரியர்; இளம்பெண் கொடுத்த புகாரில் கைது! 

Teacher arrested by police who fraudulent 95 lakhs

Advertisment

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த தங்கமயில் என்பவரின் தந்தை கலியமூர்த்தி. இவர் திருவெண்ணைநல்லூரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் முகவராக பணிபுரிந்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். அதன் பின் அதே பணியில் ஒப்பந்த ஊழியராக 2017ம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். அந்த காலகட்டத்தில் அப்பகுதியில் உள்ள டி. புதுப்பாளையத்தைச் சேர்ந்த ஆசிரியர் சங்கரன்(51) என்பவர் கலியமூர்த்திக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

சங்கரன் சித்தலிங்கமடம் என்ற ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2019ம் ஆண்டு மின்வாரியத்தில் பல பணிகள் காலியாக உள்ளன என்றும், அந்தப் பணி கிடைக்க ஒரு நபருக்கு மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் விரைவில் வேலை வாங்கித் தருவதாகவும் கலியமூர்த்தியிடம் கூறியுள்ளார். இதை நம்பிய கலியமூர்த்தி, தனக்கு தெரிந்தவர்கள் சுமார் 40 பேரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி தலா 2 லட்சம் ரூபாய் வீதம் வசூல் செய்து மொத்தம் சுமார் 95 லட்சத்தை ஆசிரியர் சங்கரனிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு கலியமூர்த்தி திடீரென இறந்துவிட்டார். அதேசமயம், கலியமூர்த்தியிடம் பணம் கொடுத்தவர்கள் அவரின் மகளான தங்கமயிலிடம் வேலையும் வரவில்லை; பணமும் வரவில்லை. வேலைகூட வேண்டாம் பணம் மட்டும் திருப்பி கொடுங்கள் என கேட்டுள்ளனர். இதையடுத்து தங்கமயில், ஆசிரியர் சங்கரனை சந்தித்து வேலை கேட்டு பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் உடனே சம்பந்தப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பித்தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

Advertisment

அப்போது சங்கரன், பணம் கொடுத்த அனைவருக்கும் விரைவில் வேலை கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து தங்கமயில், பணம் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதன்பின் சங்கரன், சுமார் 24 லட்சம் ரூபாய் பணத்தை மட்டும் தங்கமயிலிடம் கொடுத்துள்ளார். மீதி ரூ 70 லட்சத்தை திருப்பித் தரவில்லை. பலமுறை கேட்டுப் பார்த்தும் சங்கரன் பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். சங்கரன் ஏமாற்றும் நோக்கத்தில் இருப்பதை அறிந்த தங்கமயில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையிடம் சங்கரன் மீது மோசடி புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சங்கரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

police teacher Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe