Advertisment

விடிய விடிய சுமுள் ஆப்பில் பாட்டு... பள்ளிக்கு செல்வதையே மறந்த ஆசிரியை...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த அழகாபுரி என்ற ஊரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முத்துலட்சுமி. இவர் சுமுள்ஆப் எனப்படும் மொபைல் ஆப்பில்பாடல் பாடுவதில் ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார். ஒருகட்டத்தில் இந்த ஆர்வம் முற்றிஉச்சகட்டத்தை தொட பாடல்களை அதிகமாக பாடி பதிவேற்றம் செய்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி மொபைல் ஆப்பிற்குஅடிமையான ஆசிரியை முத்துலட்சுமி இதனால் பள்ளிக்கு செல்வதையே நிறுத்திவிட்டார் என்றார் பாருங்கள்.

Advertisment

app

app

விடிய விடிய மொபைல் ஆப் மூலம் பாடல்கள் பாடி பதிவேற்றி வந்த ஆசிரியை முத்துலட்சுமி தான் பாடும் பாடல்களுக்கு ஏற்றவாறு கெட்டப்போட்டும்பாடல்கள் பாடி பதிவிட்டுள்ளார். இப்படி அவர் இந்த மொபைல்ஆப்பிற்குஅடிமையானதால் விடிய விடிய பாடல்கள் பாடி வந்ததால் காலையில அயர்ந்துதூங்கிவிடுவார் இதனால் அவர்பள்ளிக்கு செல்வதையே தவிர்த்துள்ளார்.

Advertisment

app

வாரத்தில் மூன்று நாட்கள் அவர் பள்ளிக்கு வந்தால் கூட அதுவே பெரிது என கூறுகின்றனர் அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள். இப்படிமொபைல் ஆப்பிற்குஅடிமையாகியதால் பள்ளி ஆசிரியை மாணவர்களுக்கு சரியாகபாடம் எடுக்காமல் பள்ளிக்கும் செல்லாமல் இருக்கும் இந்த நிலையில் இது பற்றி குற்றம்சாட்டி வருகின்றனர் அவருடன் பணியாற்றும் ஆசிரியர்களும் அந்த ஊர் மக்களும்.

இந்த விவகாரம் குறித்து ஆசிரியை மீது மாவட்ட பள்ளிக்கல்வி துறைக்கு புகார் போக அதிகாரிகள் கேட்கப்போகும் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் ஆசிரியை முத்துலட்சுமி.

teacher Mobile Phone
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe