Advertisment

27 மாவட்டங்களில் நாளை முதல் தேநீர் கடைகள் திறக்க அனுமதி!

 Tea shops to open in 27 districts from tomorrow

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், கரோனா பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை 35 நாட்களுக்கு பிறகுநாளைகட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது.27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைவான அதே 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தேநீர் கடைகளில் பார்சல் மட்டும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெகிழிப் பைகளில் தேநீர் பெறுவதை தவிர்க்குமாறும் மக்களுக்கு அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Advertisment

அதேபோல் இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகள் 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவன அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த தளர்வுகள் பொருந்தாது. மற்ற 27 மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த தளர்வுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

corona virus tamilnadu lockdown Tea stall
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe