Advertisment

கஞ்சா போதையில் தேநீர் கடையின் ஊழியரைத் தாக்கிய கும்பல்!

tea shop labour incident cctv footage police investigation

கஞ்சா போதையில் தேநீர் கடையின் ஊழியரைக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சி- திண்டுக்கல் சாலையில் உள்ள தேநீர் கடைக்கு சென்ற மூன்று இளைஞர்கள் அங்கிருந்து புகையிலையை வாங்கியிருக்கிறார்கள். பின்னர், புகையிலைக்குள் கஞ்சாவை வைத்துப் புகைக்க முயன்றுள்ளனர்.

Advertisment

கடையிலிருந்தவர்கள் கண்டித்ததால், மூன்று இளைஞர்கள் சேர்ந்து இரும்பு கம்பியால் தேநீர் கடையின் ஊழியர்களைத் தாக்கியுள்ளனர். இதில் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் தொடர்பான, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

மேலும், இரண்டு பேரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe