Advertisment

டீக்கடை சிலிண்டர் வெடித்து விபத்து! 

Tea shop cylinder crashes!

Advertisment

திருச்சி காந்தி சந்தையின் முன்பாக உள்ள டீக்கடையில் இன்று (23.12.2021) காலை 6.30 மணி அளவில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில் டீக்கடைக்கு அருகில் இருந்த 5 கடைகளில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. கன்டோன்மென்ட் தீயணைப்பு கட்டுப்பாட்டு மையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 2 தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைத்துவருகின்றனர். ஏறத்தாழ 12க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேரம் போராடி தற்போது தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ஆனால், இன்னும் முழுமையாக அணைக்கவில்லை. முழுமையாக அணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

காய்கறிகள் வாங்குவதற்காக வரும் மக்கள் சாலையில் நின்று வேடிக்கை பார்ப்பதால், அவர்களைப் பாதுகாப்பு கருதி கலைந்து செல்லும்படி காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் அறிவுறுத்திவருகின்றனர். டீக்கடைக்கு அருகில் உள்ள ஐந்து கடைகளும் முழுமையாக சேதமடைந்துள்ளன.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe