NN

காரைக்காலில் டெய்லர் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காரைக்கால் அக்கரைவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (45) கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த சத்யா தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். காரைக்கால் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள குடியிருப்பில் டெய்லர் கடை ஒன்றில் கடந்த ஏழு வருடமாக அவர் பணியாற்றி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று மாலை சுமார் 4 மணியளவில் அங்கு வந்த மர்ம ஒருவர் அவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென எதிர்பாராத விதமாக கத்தியை எடுத்து சரமாரியாக சத்யாவை தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சத்யாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நகர காவல்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் டெய்லர் கடையில் புகுந்து பெண் ஒருவருக்கு சரமரியாக கத்திக்குத்து விழுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.