Advertisment

வரி ஏய்ப்பா...? இபிஎஸ்ஸை ஆதரிக்க நிர்வாகிகளுக்கு பணமா...?-அருப்புக்கோட்டையில் ஒரு அதிரடி ரெய்டு! 

Tax evasion...? Money for admins to support EPS...?-An action raid in Aruppukota!

அருப்புக்கோட்டை மதுரை சாலையில் உள்ள எஸ்.பி.கே நிறுவன உரிமையாளர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Advertisment

அருப்புக்கோட்டை மதுரை சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அவருடன் தொடர்புடைய 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

வரி ஏய்ப்பு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறதா அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் நிகழ்விற்காக இந்த சோதனை நடைபெறுகிறதா என இந்த சோதனை தொடர்பாக யூகங்கள் கிளம்பியுள்ளன. அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி மற்றும் அவரது மகன்களுடன் இணைந்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை எடுத்து எஸ்.பி.கே நிறுவனம் பணி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

admk Aruppukkottai raid
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe