Advertisment

“வரிச்சலுகை வழங்க வேண்டும்” - சுதா எம்.பி. வலியுறுத்தல்!

Tax concession should be given  Sudha MP. Emphasis

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு சாம்பியனாக இருந்த சீன வீரர் டிங் லீரெனை எதிர்த்து இந்திய செஸ் வீரர் குகேஷ் (வயது 18) விளையாடினார். பரபரப்பான 14 சுற்று ஆட்டத்தில் டிங் லீரெனை வீழ்த்தி குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றார். இதன்மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். மேலும் குகேஷுக்கு பரிசுத் தொகையாக 11 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் குகேஷுக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை எம்.பி. சுதா பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலக செஸ் சாம்பியனாக குகேஷ் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அவருக்குக் கிடைத்த பரிசுத் தொகை சுமார் 11 கோடியில் 4 கோடிக்கும் மேல் வரியாக கட்டும் சூழல் உண்டாகியிருக்கிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கு வரிச்சலுகை வழங்கியது போல், குகேஷுக்கும் வரிச்சலுகை வழங்கினால் அது இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதாக அமையும்.

Advertisment

அதே போல் குகேஷின் சாதனையை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வழியில் மத்திய அரசும் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும். நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் குகேஷின் சாதனையை பாராட்டி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். உலக சாதனையை உரிய முறையில் கௌரவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 5 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையினை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் (17.12.2024) வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

letter tax gukesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe