Advertisment

அங்கெல்லாமா பச்சை குத்துவது; இளைஞரின் உயிரைப்பறித்த டாட்டூ

NN

டாட்டூ கலாச்சாரம் பழையது என்றாலும் தற்போது நவீன முறையில் டாட்டூக்களை போட்டுக்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஊருக்கு ஊர் டாட்டூ ஸ்டுடியோக்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் கைகள் மட்டுமல்லாது உடலின் வேறு சில இடங்களில் டாட்டூ செலுத்திக்கொள்ளும் நடைமுறையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூரைச சேர்ந்த இளைஞர் கழுத்து பகுதியில் டாட்டூ போட்டுக்கொண்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பெரம்பலூரைச் சேர்ந்த பரத் என்ற 22 வயதுஇளைஞர் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த டாட்டூ கடையில் கழுத்தின் பின் புறத்தில் நங்கூரம் குறியீட்டை போன்று டாட்டூ போட்டுள்ளார். கழுத்துப் பகுதியில் டாட்டூ போட்டதால் அந்த பகுதியில் புண் ஏற்பட்டு நரம்புகள் காயமடைந்தது. இதனால் நெறி கட்டிகொண்ட நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரத் சென்றுள்ளார். அப்பொழுது அந்த பகுதியில் சீழ் பிடித்திருந்தது தெரிய வர, மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவருடைய ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Advertisment

incident Puducherry Perambalur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe