Tata Group Chairman Meets Tamil Nadu Chief Minister

Advertisment

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் இன்று (06/10/2021) நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப., நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன் இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம் இ.ஆ.ப., முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் இ.ஆ.ப. ஆகியோர் உடனிருந்தனர்.