Advertisment

சிவகாசியில் டாஸ்மாக் மதுவில் விஷம் ; மூன்று பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்

சிவகாசியில் அரசு மதுபானக் கடையில் மது அருந்திய ஏழுபேரில் மூன்று பேர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

சிவகாசியில் ரட்சன்தியேட்டர் பின்புறம் உள்ள ஒரு அரசு மதுபானக்கடையில் நேற்றிலிருந்து ஏழுநபர்கள் கூட்டாகமது அருந்தியுள்ளனர். அதேபோல் சிவகாசியில் உள்ள மற்றொரு அரசு மதுபானக்கடையில் தொடர்ந்து இன்றுமது அருந்தியுள்ளனர். இப்படி மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்ற அனைவருக்கும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் மூன்று பேர் இறந்துள்ளனர்.

கணேசன் (20), கவுதமன் (15), முகமது இப்ராகிம் (22)ஆகியோர் மதுவினால் இந்த சம்பவத்தில்இறந்துள்ளனர்.இவர்களுடன் மது அருந்திய மற்றஐந்து பேரும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுதொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் அதே பகுதியில் பராசக்தி காலனியில் உள்ளமற்றொரு மதுபானக்கடையில் மது அருந்தி தலைசுற்றல் ஏற்பட்டதாக இருவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் குறிப்பிடும் பொழுது மதுவில் விஷம் கலக்கப்பட்டது தெரியவந்துள்ளது. விஷம் எப்படி கலக்கப்பட்டது என்பதுபற்றி போலீசார் ஏழு தனிப்படை அமைத்துவிசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மதுவில் விஷம் கலக்கப்பட்டதா? அல்லாது மதுவே விஷமானதா? எனஅப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

death killed tasamak Sivakasi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe