நாமக்கல்லில் டாஸ்மாக்கை உடைத்து கொள்ளை... போலீசார் விசாரணை!

Tasmak broken and robbed in Namakkal ... Police investigation!

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாகவும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பல்வேறு ஆலோசனைகளுக்கு பின் மீண்டும் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டு இருந்தது. தற்போது வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளில் திருட்டு அதேபோல் கள்ளச்சாராய ஊறல்கள், கள்ள மது விற்பனை போன்றவை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முத்துகாளிப்பட்டி என்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடைத்து மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

corona virus namakkal TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe