Advertisment

குவாட்டருக்கு 10 ரூபாவா? - அதிர்ச்சியான மதுப்பிரியர்கள்

Tasmac worker who oversold a alcohol bottle by Rs 10

Advertisment

“நீ யாருகிட்ட வேணாலும் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ.. எங்கள ஒன்னும் பண்ண முடியாது” என திமிராக பேசும் டாஸ்மாக் விற்பனையாளர் ஒருவர்மதுபாட்டிலுக்கு அதிகம் பணம் வாங்கும் வீடியோ வெளியாகிபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதிக்கு அருகே உள்ளது மேல்புதுப்பாக்கம் கிராமம். இந்த பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்களாக தேவேந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள்மதுபாட்டிலை 130 ரூபாய்க்கு வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்புமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இந்த டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். அப்போது, அந்த கடையில், “இந்தாப்பா 130 ரூபா.. ஒரு குவாட்டர் கொடு” என கேட்டதற்கு அங்கு பணியில் இருந்த தேவேந்திரன், “130 ரூபாய்க்குலாம் சரக்கு இல்ல. 140 ரூபா சரக்கு தான் இருக்கு” என எக்ஸ்ட்ராவாக 10 ரூபாய் வாங்கியுள்ளார்.

Advertisment

இதனால் விரக்தியடைந்த மதுப்பிரியர்கள், “என்னைய்யா நியாயம் இது. அப்போலாம் குவாட்டருக்கு 5 ரூபா எக்ஸ்ட்ரா வாங்குனீங்க.. இப்போ 10 ரூபா வாங்குறீங்க” என டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதற்கெல்லாம் அஞ்சாத தேவேந்திரன், “நாங்க மட்டுமா இப்படி விக்கிறோம். தமிழ்நாடு ஃபுல்லாவே 140 ரூபாய்க்கு தான் விக்கிறாங்க. முதல்ல அங்க போயிட்டு கேளுங்கய்யா” என திமிராகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, தேவேந்திரனின் பேச்சால் மேலும் கடுப்பான மதுப்பிரியர்கள், “இதென்ன உன் அப்பன் வீட்டு பணமா.. அப்படின்னா இந்த பாட்டிலுக்கு பில்லு கொடுயா.. இல்லனா கடைய மூடு” என கொந்தளித்துள்ளனர். அப்போது, சிறிதும் பதற்றம் இல்லாமல் பேசிய அவர், “பில் எல்லாம் கொடுக்கமுடியாது. நீ யாருகிட்ட வேணாலும் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ. டாஸ்மாக் ஆபிஸ்ல கூட கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ. எங்கள ஒன்னும் பண்ண முடியாது” என கூலாக பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, இத்தகைய சண்டைகளுக்கு பிறகும்அவர்கேட்ட பணத்திற்கு தான்மதுபாட்டிலை கொடுத்துள்ளார்.

இதுபோல் மதுபாட்டிலுக்கு அதிக பணம் வாங்கும் டாஸ்மார்க் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபாதிக்கப்பட்ட மதுப்பிரியர்கள் புலம்பியபடி கோரிக்கை வைக்கின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள்சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ranipet TASMAC
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe