Skip to main content

குவாட்டருக்கு 10 ரூபாவா? - அதிர்ச்சியான மதுப்பிரியர்கள்

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

Tasmac worker who oversold a alcohol bottle by Rs 10

 

“நீ யாருகிட்ட வேணாலும் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ.. எங்கள ஒன்னும் பண்ண முடியாது” என திமிராக பேசும் டாஸ்மாக் விற்பனையாளர் ஒருவர் மதுபாட்டிலுக்கு அதிகம் பணம் வாங்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதிக்கு அருகே உள்ளது மேல்புதுப்பாக்கம் கிராமம். இந்த பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்களாக தேவேந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் மதுபாட்டிலை 130 ரூபாய்க்கு வாங்கிச் செல்வது வழக்கம். 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இந்த டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். அப்போது, அந்த கடையில், “இந்தாப்பா 130 ரூபா.. ஒரு குவாட்டர் கொடு” என கேட்டதற்கு அங்கு பணியில் இருந்த தேவேந்திரன், “130 ரூபாய்க்குலாம் சரக்கு இல்ல. 140 ரூபா சரக்கு தான் இருக்கு” என எக்ஸ்ட்ராவாக 10 ரூபாய் வாங்கியுள்ளார்.

 

இதனால் விரக்தியடைந்த மதுப்பிரியர்கள், “என்னைய்யா நியாயம் இது. அப்போலாம் குவாட்டருக்கு 5 ரூபா எக்ஸ்ட்ரா வாங்குனீங்க.. இப்போ 10 ரூபா வாங்குறீங்க” என டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதற்கெல்லாம் அஞ்சாத தேவேந்திரன், “நாங்க மட்டுமா இப்படி விக்கிறோம். தமிழ்நாடு ஃபுல்லாவே 140 ரூபாய்க்கு தான் விக்கிறாங்க. முதல்ல அங்க போயிட்டு கேளுங்கய்யா” என திமிராகக் கூறியுள்ளார்.

 

இதையடுத்து, தேவேந்திரனின் பேச்சால் மேலும் கடுப்பான மதுப்பிரியர்கள், “இதென்ன உன் அப்பன் வீட்டு பணமா.. அப்படின்னா இந்த பாட்டிலுக்கு பில்லு கொடுயா.. இல்லனா கடைய மூடு” என கொந்தளித்துள்ளனர். அப்போது, சிறிதும் பதற்றம் இல்லாமல் பேசிய அவர், “பில் எல்லாம் கொடுக்க முடியாது. நீ யாருகிட்ட வேணாலும் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ. டாஸ்மாக் ஆபிஸ்ல கூட கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ. எங்கள ஒன்னும் பண்ண முடியாது” என கூலாக பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, இத்தகைய சண்டைகளுக்கு பிறகும் அவர் கேட்ட பணத்திற்கு தான் மதுபாட்டிலை கொடுத்துள்ளார். 

 

இதுபோல் மதுபாட்டிலுக்கு அதிக பணம் வாங்கும் டாஸ்மார்க் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மதுப்பிரியர்கள் புலம்பியபடி கோரிக்கை வைக்கின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.