TASMAC

Advertisment

Advertisment

சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முதுநிலை மண்டல மேலாளர், மாவட்ட மேலாளர்கள், சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளின் முறைகேடுகள் மீது விசாரணை நடத்தவும், முறையற்ற கடை ஆய்வு அறிக்கைகளை ரத்து செய்திட வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.