/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/618_5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/619_4.jpg)
மே. 7 மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் 40 நாட்களுக்குப் பின்பு மதுக்கடைகளில் பாட்டல்கள் வாங்குவதற்காக முண்டியடித்த கூட்டத்திலிருந்தவருக்குக் கரோனா தொற்று உறுதியானதால் அவரோடு கூட்டத்தில் இருந்த குடிமகன்கள் அச்சத்திலிருக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தலுகாவிற்குட்பட்ட சேர்ந்தமரம் கள்ளம்புளி ரோடு கிராமத்தைச் சேர்ந்த 35 வயது நபர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் லோடு மேன் வேலையிலிருந்தார். கரோனா தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பியவர் 4 லாரிகளில் மாறி மாறிப் பயணம் செய்து சங்கரன்கோவில் வந்தவர், பின்பு அங்கிருந்து நடந்தே கடந்த 6ம் தேதியன்று சேர்ந்தமரம் வந்து சேர்ந்திருக்கிறார். வந்தவர் நண்பர்கள் உறவினர்களுடன் தொடர்பிலிருக்க தகவல் போய் தென்காசி சுகாதாரத்துறையினர் 7ம் தேதி காலை அவரது சளி, ரத்த மாதிரி எடுத்து அவரைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பினர்.
ஆனால் அவர் அதனைப் புறக்கணித்துவிட்டு ஊரணித் தெருவைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் அந்தப் பகுதியின் டாஸ்மாக் கடைக்குச் சென்று முண்டியடித்து 500 ரூபாய் நோட்டு மூன்றை மாற்றி பாட்டல்கள் வாங்கி அருந்தியுள்ளார். இந்த நிலையில் அவருக்குக் கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத் துறையினர் அவரை ஆம்புலன்சில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கரோனா சிறப்பு வார்டில் அனுமதித்தனர்.
அவரது வீடு மற்றும் சுற்றுப்பகுதிகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவரின் சகோதரரும் அவரிடம் பணம் வாங்கி அங்குள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கியது தெரியவர, அந்தப் பகுதி காவல் துறையினரால் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. சேர்ந்தமரத்தின் நான்கு எல்லைகளும் மூடி சீல் வைக்கப்பட்டன. கோயம்பேட்டிலிருந்து கரோனாத் தொற்றுடன் சேர்ந்தமரம் வந்தவருக்கு தொற்று உறுதியானதால் டாஸ்மாக் பாட்டல் வாங்க அவரோடு வரிசையில் கூட்டமாக முண்டியடித்த குடிமகன்கள் மத்தியில் பீதி பரவியிருக்கிறது. அவருடன் தொடர்பிலிருந்த 20 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)