t

Advertisment

கரோனா வைரஸ் காரணமாக 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள் கடந்த 7 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்நிலையில் 8 ஆம் தேதி மாலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மதுபானக் கடைகள் எதுவும் திறக்கப்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் கோவை செல்வபுரம் சாலை செட்டி வீதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையின் (1672) மேற்புறத்தில் உள்ள ஓடுகளை இளைஞர் ஒருவர் பிரித்துக் கொண்டிருந்தார்.

Advertisment

இதனை அவ்வழியாக நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்கள் பார்த்து பெரிய கடை வீதி போலீசாருக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து மதுபானக் கடைக்குள் இறங்க முயற்சித்த நபர் பின் வழியாக கீழே குதித்து தப்பி ஓடினார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குகாவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீ ராமச்சந்திரன் தலைமையில் வந்த போலீசார் மதுபானக் கடையில் உள்ளே சென்று பார்த்தபோது மது பாட்டில்கள் ஏதும் திருடப்படவில்லை. ஆனாலும் மது பாட்டில்கள் திருட வந்த நபர் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.