/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/39_53.jpg)
தமிழகம் முழுவதும் 500 மதுபான சில்லறை விற்பனைகடைகள் உடனடியாக மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின்போது 500 மதுபான சில்லறை விற்பனைகடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி 500 மதுபான சில்லறை விற்பனைகடைகளைக் கண்டறிந்து மூட கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அரசாணைவெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்துஅந்த அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைகடைகளில் 500 கடைகளைக் கண்டறிந்து அவற்றை நாளை முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)