Skip to main content

டாஸ்மாக் கடையை மூடு..! போராட்டக்களத்தில் மாணவர்கள்..!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018
3


தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் பணிக்கொண்டான்விடுதி ஊராட்சி மேலஊரணிபுரம் கல்லணை கால்வாய் வாய்காலின் கீழ மெயின் கரை அருகில் ஒரு டாஸ்மாக அரசு மதுக்கடையும், அதேபோல 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் அலிவலம் பிரிவு வாய்க்காலின் தென்கரையில் ஒரு மதுக்கடையும் திறக்க தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் முன்வந்தது.

 

 

இதை அறிந்த பணிக்கொண்டான்விடுதி ஊராட்சி பொதுமக்கள் எங்கள் ஊராட்சிக்குள் மதுக்கடை அமைக்க கூடாது என்று வலியுறுத்தி 100 பேர் நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரையிடம் மனு கொடுத்தனர். அதன் பிறகு கிராமம் மக்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்கண்ட இரண்டு மதுக்கடைகளும் அமைக்க தடை விதிக்கப்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறக்கப்பட்டது.
  2


ஆனால் நீதிமன்ற தடை உத்தரவு மதிக்கப்படாமல் தஞ்சாவூர் மாவட்ட அதிகாரிகள் மேற்கண்ட இரண்டு இடத்திலும் மதுக்கடையினை 07ந் தேதி மாலை 4.30 மணிக்கு திறந்துவிட்டனர். அதனால் வெகுண்டனர் மக்கள்.. நீதிமன்ற ஆணையை மீறியும், இவ்வூராட்சி மக்களுக்கும், மாணர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராகவும் திறக்கப்பட்ட மதுக்கடையை அப்புறபடுத்த வலியுறுத்தி நேற்று 9ந் தேதி காலையில் பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது.
 

1


இந்த போராட்டத்தில் அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகளும சீருடையுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து 3 மணி நேரம் போராட்டம் தொடர்ந்ததால் மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்தனர். மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றனர் மாணவர்கள். அதிகாரிகளுடன் பேசி நல்ல முடிவு எடுப்பதாக சொன்ன பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

சார்ந்த செய்திகள்