Advertisment

கூடுதல் விலைக்கு விற்கும் டாஸ்மாக்!-கொடைக்கானல் குமுறல்!

TT

Advertisment

தமிழகத்தில் உள்ளடாஸ்மாக்கடைகள், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையை நன்றாகவே பார்க்கின்றன.எப்படிதெரியுமா? திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு பிரகாரம், மலைப்பிரதேசமான கொடைக்கானலில்மதுபாட்டில்களைத்திரும்பப்பெறும் நடைமுறை, கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி, மது வாங்குவோர்டாஸ்மாக்கில்அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாகத் தந்து, பின்னர் காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைத்து, அந்த 10 ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

இது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம் எனக் குடிமகன்கள் ஏன் குமுறுகின்றனர்?

 Tasmac selling at an additional price!

அரசு நிர்ணயித்த ஒருகுவாட்டர்ரம்விலை குறைந்தபட்சம் ரூ.130 ஆகும். தமிழ்நாடு முழுவதும் ரூ.5 கூடுதலாக வைத்து ரூ.135-க்குவிற்கின்றனர். கொடைக்கானல் மலைப்பிரதேசம் என்பதால், இன்னும் கூடுதலாக ரூ.5 விலைவைத்து குவாட்டர்ரம்ரூ.140-க்குவிற்றனர். மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புக்குப் பிறகுரம்குவாட்டர்விலை ரூ.150-ஆக எகிறிவிட்டது. மது குடித்துவிட்டுஸ்டிக்கர்ஒட்டிய பாட்டிலை ஒப்படைத்தால் மட்டுமே ரூ.10 திரும்பக் கிடைக்கும்.

Advertisment

சுற்றுலாப் பயணிகளில்அநேகம்பேர்,டாஸ்மாக்கடையில்மதுபாட்டில்கள்வாங்கிக்கொண்டு, விடுதி அறைகளிலோ, வேறு எங்கோ வைத்துத்தான் குடிக்கின்றனர்.உள்ளூர்வாசிகளும்கூட, மது பாட்டில்களை வாங்கி வீட்டுக்குப்போய்த்தான்குடிக்கின்றனர். ஒரு பாட்டிலுக்கு ரூ.10 திரும்பக் கிடைக்கும் என்பதற்காக, அந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு சுற்றுலாப் பயணிகளோ,உள்ளூர்வாசிகளோதிரும்பவும் அதேடாஸ்மாக்கடைக்குப் போவார்களா? ஆக, ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாக ரூ.20-ஐ கொடைக்கானலில்மதுப்பிரியர்கள்தந்தாக வேண்டியதிருக்கிறது.

‘இது அநியாயமல்லவா?’ என்றுமதுப்பிரியர்கள்டாஸ்மாக்கடைகளில் வாதிடும்போது “கட்டிங்கொடுக்கணும்.போலீஸ்வந்தால் சரக்குகொடுக்கணும்.நாங்கஎத்தனை பேரைத்தான் சமாளிக்கமுடியும்? தமிழகத்தில் இரவு நேரத்தில்போலீஸ்ஏட்டையா வந்து மாமூல் வாங்காதடாஸ்மாக்கடை உண்டா? பார் உண்டா?” எனத் தங்கள் பங்கிற்குப் புலம்பித் தள்ளுகிறார்கள்.

மது சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலோ என்னவோ, அனைத்துத் தரப்பிடமிருந்தும் புலம்பல் சத்தம் கேட்கிறது.

price kotaikkanal TASMAC
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe