Published on 05/11/2021 | Edited on 05/11/2021

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்கு 3ஆம் தேதி மற்றும் 4ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் ரூ. 431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 3ஆம் தேதி ரூ. 205.61 கோடிக்கும், 4ஆம் தேதி ரூ. 225.42 கோடிக்கும் விற்பனை நடந்துள்ளன. கடந்த ஆண்டு தீபாவளி அன்று ரூ. 467.69 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ. 431.03 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இதில் மதுரை மண்டலத்தில், ரூ.98.89 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ. 89.95 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ. 87.89 கோடி, சென்னை மண்டலம் ரூ. 79.84 கோடி, கோவை மண்டலம் ரூ. 74.46 கோடி என மது விற்பனையாகியுள்ளது.