Advertisment

குடியிருப்பு கட்டிடத்தில் டாஸ்மாக்! -சட்ட விரோதம் என மூடுவதற்கு உத்தரவு!

குடியிருப்புக்காக அனுமதி பெற்ற கட்டிடத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை வடபழனியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் பொது நல வழக்கில், வடபழனி நெற்குன்றம் பாதையில் அதிகளவில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்தப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டு, வாகனங்கள் 100 அடி சாலையில் நிறுத்தப்படுகின்றன. அதனால், சாலையைப் பயன்படுத்த பொதுமக்கள் சிரமப்படுவதாகவும், மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisment

 TASMAC in the residential building! Order to shut down

டாஸ்மாக் கடை அமைந்துள்ள கட்டிடம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது குடியிருப்பு கட்டிடத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனம் அதை மறைத்து அந்தக் கட்டிடத்தில் புதிய டாஸ்மாக் கடை திறந்து உள்ளது. எனவே, சட்டவிரோதமாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்தும் சட்ட விரோதமாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடும்படியும் உத்தரவிட்டனர்.

Chennai highcourt TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe