TASMAC reopens tomorrow in Tamil Nadu

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஏற்கனவே தமிழகத்தில் கடந்த மே 7-ஆம் தேதி தமிழக அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடுக்கப்பட்டநிலையில்டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுஉச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில்டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

Advertisment

இந்நிலையில் நாளை மீண்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும்.மது குடிப்போருக்கு ஏழு நாட்களில், ஏழு வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும் எனடாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாஅதிகம் உள்ள பகுதிகளைதவிர மீதி இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருக்கிறது. சென்னை, திருவள்ளூரை தவிர மற்ற மாவட்டங்களில் சமூக இடைவெளியுடன் மதுபானங்கள் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இரண்டு மாத காலத்திற்கு இடைக்கால தடை விதித்து இருப்பதால் இரண்டு மாதங்களுக்கு தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறந்திருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 550 பேர் வரிசையில் இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு டோக்கன் கொடுத்து மறுநாள் மது வழங்கப்படும்.சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் எந்த சமரசமும் காட்ட வேண்டாம் என உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. டோக்கன் தரும் இடம் தனியாக அமைய வேண்டும். மது வினியோககவுண்டர்களை அதிகரிக்க வேண்டும்.மது வாங்க வருவோர் வாகனங்கள் நிறுத்துவதற்கு உரிய இட வசதி செய்து தரவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.