டாஸ்மாக் திறப்பு: கடை முன் அரங்கேறிய வினோத சம்பவம்!!

Tasmac opened, DMK member's bizarre act

கரோனா ஊரடங்கில் இன்றுமுதல் (14.06.2021) பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், மதுரையிலுள்ள அனைத்து மதுபானக்கடைகளும் திறக்கப்பட்டன. கடைகள் முன்பாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மதுப்பிரியர்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், முதல் நாளான இன்று கடையைத் திறக்கும் முன்பாக திமுக உறுப்பினர் ஒருவர் கடைக்குச் சூடம் ஏற்றி, பூ தூவி கும்பிட்டு, பின் மதுவை வாங்கி மதுபாட்டில்கள் முன்பாக தரையில் விழுந்து கும்பிட்டுச் சென்றார். தொடர்ந்து ஏராளமான தொழிலாளர்களும், இளைஞர்களும் காத்திருந்து மதுவை வாங்கிச் சென்றனர். தமிழ்நாட்டில் கரோனா பரவல் 15 ஆயிரம் அளவிற்கு குறைந்த நிலையில், தற்போது மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதற்குபல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

madurai TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe