Advertisment

டாஸ்மாக திறப்பு: கடைகள் முன்பு குவிந்த மது அருந்துவோர்!! (படங்கள்)

Advertisment

கரோனா தொற்று வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து கடந்த மே 10ஆம் தேதி முதல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்குவந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து தொற்று அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு, கடந்த மே 24ஆம் தேதிமுதல் முழுமையான ஊரடங்கு அமலுக்குவந்தது. அதன்பின்னர் கடந்த 7ஆம் தேதிமுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்குவந்தது.

அதேவேளை தொற்று அதிகமாக உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு குறைவான தளர்வுகளும் மீதமிருக்கும் மாவட்டங்களுக்கு சற்று அதிகமான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அந்தவகையில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அழகு நிலையங்கள், சலூன்கள் திறப்பு, பூங்காக்கள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (14.06.2021) மயிலாப்பூர் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க மது அருந்துவோர் கூட்டமாக கூடினர்.

mylapore TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe