Advertisment

ஒரு நாளைக்கு 500 டோக்கன்தான்... அலைமோதும் கூட்டம்! (படங்கள்)

Advertisment

கரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. சென்னை பெருநகர் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத்தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருக்கும் மதுபானக் கடைகள் 07.05.2020 முதல் திறக்க தமிழக அரசு அனுமதித்திருந்தது.

இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த டாஸ்மாக் கடைகளும் 18.08.2020 முதல் திறக்கப்படும் என்றுஅரசு அறிவித்தது. அதன்படி இன்று காலை சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மதுபான விற்பனை துவங்கியது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் கடைகளுக்கு முன்னாள் மதுக் குடிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் மூலம் மதுவாங்கிச் செல்கின்றனர். அரசு அறிவுறுத்தபடி நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Chennai TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe