Tasmac open issue - ADMK Minister  SellurRaju question to DMK

கரோனா வைரஸ் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் தமிழக அரசு உத்தரவுப்படி நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் இன்று டாஸ்மாக் கடைகள், பல நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன.

Advertisment

Advertisment

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று காலை 10 மணி முதல் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் தமிழக அரசுக்கு எதிராக வீட்டு வாயிலில் மக்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ வாயிலாக கேட்டுக்கொண்டார். இதன்படி அவரும் இன்று கருப்பு உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ, மது வேண்டாம் எனக்கூறும் திமுகவினர் அவர்களது குடும்பத்தினர் நடத்தும் மது ஆலைகளை மூடத்தயாரா? என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சிக்கு வர வேண்டும் என திமுக நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.