tasmac open issue - Actor Kamalhaasan question to the Tamil Nadu government

கரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு, தற்போது மே 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் சில தளர்வுகள் மே 4- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகத்திலும் ஊரடங்கில் சில தளர்வுகள் படிப்படியாக கொண்டுவரப்பட்டன.

Advertisment

ஆனால் தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளநிலையில்தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பையும் நேற்று முன்தினம் தமிழக அரசு வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்ற கட்டுப்பாட்டோடு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், எதன் அடிப்படையில் மதுக்கடையை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது என்று கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.