திருச்சியில் அடுத்தடுத்து கைதாகும் டாஸ்மாக் அதிகாரிகள் !

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு பிறகு, இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முற்றிலும் மூடப்பட்டது. இதற்கு இடையில் திருச்சியில் அடுத்தடுத்து டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபாட்டில்கள் திருடும் சம்பவமும் நடைபெற்றது. மதுபாட்டிகளை திருடுவது யார் என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றார்கள் டாஸ்மார்க் அதிகாரிகள்.

TASMAC Officers Arrest In Trichy

இந்த நிலையில் டாஸ்மார்க் கடைகளில் இருந்து கள்ளத்தனமாக அதிகாரிகள் துணையோடு மதுபாட்டில்கள் திருடப்பட்டு கிராமங்களில் கள்ள சந்தையில் விற்கப்பட்டு வருகிறது என்கிற தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு புகாராக வந்தது.

இதனால் மதுபாட்டில்களை பாதுகாக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் கடைகளில் இருந்த இருப்புகளை சோதனை செய்து அதனை ஒரு இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் பணிகளை திருச்சியில் ஆரம்பித்தனர்.

nakkheeran app

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ச. அய்யம்பாளையம் ஊராட்சியில் உள்ளது கருங்காடு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு மதுபான டாஸ்மாக் கடையினை திறந்து, மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் அகிலனுக்கு தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் தடை உத்தரவை மீறி கடையினை திறந்து மதுபாட்டில்களை விற்பனை செய்த கடையின் மேற்பார்வையாளர் அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெரியகண்ணன் மகன் ரவிச்சந்திரன் (வயது 45), விற்பனையாளர் கோவிந்தராஜ் (வயது 47) மற்றும் மதுபான பாட்டில்களை வாங்கிய அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன், திருப்பதி, சரத்குமார், தனபால் ஆகிய 6 பேரையும் கைது செய்து, இவர்களிடமிருந்து 96 மது பாட்டில்களையும், ரூ. 38 ஆயிரம் ரொக்கத்தினையும் பறிமுதல் செய்தனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கைதான 6 பேரையும் திருச்சி குற்றவியல் நடுவர் எண் 4 ல் ஆஜர் படுத்தினர். நீதிபதி உத்தரவின்கீழ் கைதான அனைவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதே போன்று திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை திறந்து மதுபாட்டில்கள் விற்ற கடையின் சூப்பர்வைசர் பனையபுரம் செந்தில்குமார், சேல்ஸ்மேன் மண்ணச்சநல்லூர் காமராஜ், மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கிய ஸ்டீபன் ஆகிய மூன்று பேரையும் மணிகண்டம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கைது செய்து சிறையில் அடைத்தார்.

arrest corona virus police TASMAC trichy
இதையும் படியுங்கள்
Subscribe