Advertisment

பார் வாடகை தொடர்பாக டாஸ்மாக் ஊழியர் கொலை

hand

சிவகங்கை மாவட்டம் சிறுமுகையில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரிந்த கேஷியர், மர்மநபர்களால்அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதனை அடுத்து அப்பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சிறுமுகையைச் சேர்ந்த காளையப்பன் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக காளையப்பன் சிறுமுகை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கேஷியராக பணிபுரிந்துள்ளார். இதன்படி காளையப்பன் மற்றும் ராஜகண்ணப்பன் இருவரும் உறவினர் என்பதும் இருவருக்கும் இடையே டாஸ்மாக் பார் வாடகை தொடர்பாக முன்பகை இருந்துள்ளது, மேலும் சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் ஊர் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் காளையப்பன், ராஜகண்ணப்பனுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisment

இதனால் கோபம் அடைந்த ராஜகண்ணப்பன் கூலிப் படையை வைத்து காளையப்பனை கொலை செய்துள்ளார். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் கொலை செய்தது ஆறு பேர் கொண்ட கும்பல் என்பதை உறுதி செய்தனர்.

இவ்விசாரணைக்கு தலைமை ஏற்ற மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தார். ராஜகண்ணப்பனை கைது செய்த தனிப்படை போலீசார் கொலை செய்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

TASMAC police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe