ஈச்சனாரி பகுதியை சேர்ந்த முருகேசன் சவுரிபாளையம் சாலை புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவரது கடைக்கு கத்தியுடன் வந்த வாலிபர் குடிப்பதற்கு சரக்கு வேண்டும் என்று கேட்க, முருகேசன் பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க முடியாது என்று கூறி அந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

Tasmac issue

இதையடுத்து முருகேசன் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கத்தியுடன் டாஸ்மார்க் விற்பனையாளரை மிரட்டிய நபரை பிடித்து விசாரித்தனர். பிடிபட்ட நபர் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் குழந்தை ராஜ்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் குழந்தை ராஜை கைது செய்து சிறையில் போலீசார் அடைத்தனர்.