Advertisment

டாஸ்மாக் கடைகளில் அமோக கொள்ளை... தாசில்தார் பேச்சுக்கே மதிப்பில்லை...  குமுறும் மதுபிரியர்கள்!!

pudukottai

Advertisment

கரோனா தொற்று பரவிவிடாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் கடைகளும் மூடப்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகள் நிம்மதியடைந்திருந்தனர். ஆனால் தமிழக அரசு மற்ற அலுவலகங்கள், கடைகளைவிட டாஸ்மாக் கடைகளை திறப்பதில் முனைப்புக் காட்டியது. மது பாட்டில்களின்விலையையும் ஏற்றியது. முதல் இரண்டு நாட்கள் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் தலையிட்டதால் மீண்டும் மூடப்பட்டது.

காவிரி ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் சட்ட திருத்தம் செய்யப்பட்டபோது, அதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்று விவசாயிகள் கதறிய போதும் அமைதிகாத்த தமிழக அரசு டாஸ்மாக் மூடியதால் வேகமாக உச்சநீதிமன்றத்திற்கு சென்று மனு தாக்கல் செய்து மீண்டும் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவைபெற்று வந்துவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி வண்ண, வண்ண டோக்கன் கொடுத்து குடைபிடித்துக் கொண்டு நீண்ட வரிசையில் முக கவசத்துடன் காத்திருந்து மது பாட்டில் வாங்கிய மது பிரியர்களுக்கு பெரிய அதிர்ச்சி. ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ. 10 முதல் ரு. 30 வரை அரசு நிர்ணய விலையை விட அதிகம் வைத்து விற்பனை செய்து வந்தனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் ஒரு டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கிய சிலர் விலை அதிகம் என்பதால் அதே இடத்தில் வாக்குவாதம் செய்த நிலையில், அங்கு வந்த அறந்தாங்கி தாசில்தார் சிவக்குமார்.. அரசு நிர்ணயித்துள்ள விலைபட்டியல் ஒட்டப்பட வேண்டும். அந்த விலையை விட ஒரு ரூபாய் கூட கூடுதல் விலைக்கு விற்க கூடாது என்று விற்பனையாளர்களிடம் எச்சரித்துவிட்டு சென்றார். அடுத்த 10 வது நிமிடத்தில் இருந்து மீண்டும் பழையபடியே கூடுதல் விலைக்கு விற்பனை செய்யத் தொடங்கி விட்டனர்.

pudukottai

இதுபற்றி சில மது பிரியர்கள் கேள்வி எழுப்ப.. பாதுகாப்புக்கு நின்ற போலீசாரே சமாதானம் செய்து அந்த இளைஞரை வெளியேற்றினார்கள். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் வரை புகார் போனாலும் எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. அப்படினால் மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தேதான் இப்படி கொள்ளை நடக்கிறதாஎன்ற கேள்வியை எழுப்பியுள்ளனர் மது பிரியர்கள். இனி வரும் நாட்களில் விலை அதிகமாக விற்றால் வாக்குவாதம் செய்யவும் பலர் தயாராகி வருகின்றனர்.

இது குறித்து மது பிரியர்கள் கூறும்போது.. பல நாட்கள் மது இல்லாமல் வாழ்ந்தோம். குடும்பமே சந்தோசமாக இருந்தது. இப்படியே வாழ்ந்துவிடலாம் என்று நினைக்கும் போது மறுபடியும் கடையை திறந்துவிட்டு எங்களை இழுக்கிறார்கள். இதனால் வீட்டில் மனைவி, அம்மாக்களுடன் சண்டைபோட்டு பணத்தை வாங்கிட்டு வந்தால்அரசாங்கம் ஒரு பக்கம் விலை ஏற்றி விற்கிறது. மறுபக்கம் விற்பனையாளர்கள் கண்டமேனிக்கு விலை ஏற்றி விற்கிறார்கள். இதனால் மதுபிரியர்கள்தான் பாதிக்கப்படுகிறோம்.

nakkheeran app

இது பற்றி விற்பனையாளர்களிடம் கேட்டால்.. நாங்க என்ன செய்றது தடுப்பு கம்புகள் கட்டியது, பாதுகாப்பு போலீசார் உள்பட அனைவருக்கும் செலவு செய்யனும். அப்பறம் மேல் அதிகாரிகள் வரை கவனிக்கனும் அதனால் நாங்க இப்படி உங்களிடம்தான் வாங்க வேண்டியுள்ளது என்கிறார்கள். இவர்கள் சொல்வது போல மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை பார்த்தால் எல்லாம் சேர்ந்து தான் செய்வார்களோ என்று தோன்றுகிறது என்றார்கள்.

ஒரு நீதிபதி பவரில் இருப்பவர் தாசில்தார். அவர் பேச்சையே மீறி விலை ஏற்றி விற்பனை செய்கிறார்கள் என்றால்?

Pudukottai TASMAC corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe