தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையான சுய ஊரடங்கு காரணமாக நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fdbhdfgv.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு மேற்கொள்ளப்பட உள்ளது. நாளை காலை முதல் மாலை வரை மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சுய ஊரடங்கை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அடைக்கப்பட்ட தண்ணீர் கேன் விற்பனை நாளை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை சென்னையில் ஆட்டோக்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் இந்த ஊரடங்கு காரணமாக இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் 3700 ரயில்கள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us