Advertisment

பெட்டி பெட்டியாய் அபேஸ்; கடையை திறந்த டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சி

Tasmac hacked through the wall; Police investigation

செங்கல்பட்டில் டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரைத் துளையிட்டு பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது பழையூர் கிராமம். இங்கு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கடையின் பின்புறம் துளையிடப்பட்டு மது பாட்டில்கள் திருடப்பட்டிருப்பது குறித்து போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.

Advertisment

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது கடையின் பின்புறம் ஒரு ஆள் உள்ளே போகும் அளவிற்கு துளை இடப்பட்டு மதுபானப் பெட்டிகள் திருடப்பட்டதும் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டதும் தெரியவந்தது. மதுபானம் விற்கப்பட்ட ஐந்து லட்சம் ரூபாயை ஏற்கனவே கடை ஊழியர்கள் நாளை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துச் சென்ற நிலையில், கடையில் இருந்த பத்தாயிரம் ரூபாய் மட்டும் திருடப்பட்டது. மது பாட்டில்களும் பெட்டி பெட்டியாகத் திருடப்பட்டு சில மது பாட்டில்கள் அங்கேயே தூக்கி வீசப்பட்டு கிடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Theft TASMAC Chengalpattu police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe