Published on 30/07/2020 | Edited on 30/07/2020

கடலூர் மாவட்டம் பூவாலை கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவர் ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவுக்கு உட்பட்ட கானூர் கிராமத்திலுள்ள மதுபானக் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது, பின்னர் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுபானக் கடை ஊழியர் உயிரிழந்ததால் விருத்தாசலம் பகுதியில் உள்ள மதுபான கடை ஊழியர்கள், பணிப் பாதுகாப்பு, கரோனா நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கடைகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திடீரென மதுபானக் கடைகள் மூடப்பட்டதால் குடி வெறியர்கள் அதிகளவில் மதுபானக் கடையில் குவிய தொடங்கினர். ஆனால் மதுபானக் கடைகள் மூடப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.