Tasmac closed in Kanchipuram, Chengalpattu, Tiruvallur

Advertisment

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாகிறது. ஜூன் 19 முதல் 30 வரையிலான12 நாட்கள்முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்,சென்னை காவல் எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சி,நந்திவரம்-கூடுவாஞ்சேரிபேரூராட்சி, காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே கடைகள் மூடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.