Tasmac clash leaves one dead-Bagheer CCTV footage

பாகூர் சித்தேரியில் மதுபான கடையில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முத்து சென்ட்ரிங் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த எட்டாம் தேதி மாலை புதுச்சேரியின் எல்லைப் பகுதியில் உள்ள பாகூர் சித்தேரி பகுதியில் உள்ள மதுபான கடைக்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்பொழுது எதிரே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தவர்களுக்கும் முத்துவிற்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறியது.

இதில் ஒன்று சேர்ந்துகொண்ட அந்த கும்பல் முத்துவை சரமரியாக பாட்டில் மற்றும் கற்களால் தாக்கினர். இதில் தலைமுகம் சேதமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முத்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட மதுபான கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சிசிடிவி காட்சியில் முத்துவை கூட்டாகச் சேர்ந்து அந்த நபர்கள் கொடூரமாக தாக்கும் இந்த வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தராஜ், ராஜேஷ், ரஞ்சித் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.