Advertisment

டாஸ்மாக் காசாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு

Tasmac cashier extorted at knifepoint

திருச்சியில் டாஸ்மாக் காசாளரிடம் கத்தி முனையில் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சி தியாகேஸ்வரி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 58).இவர் திருச்சி பாலக்கரை பகுதி மணல்வாரிதுறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று பாலக்கரை கீழப்புதூர் மெயின் ரோடு அருகில் வரும் பொழுது ரவியை வழிமறித்து அவரிடம் கத்தி முனையில் ரூபாய் 2000 பணத்தை பறித்துக் கொண்டு மூன்று பேர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ரவி பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார்.

Advertisment

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி திருடிச் சென்ற சந்திரசேகர் (வயது 30), சரவண பிரபு (வயது 23), மதன்ராஜ் (வயது 33) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

TASMAC police thiruchy Robbery
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe