Advertisment

டாஸ்மாக் பாதுகாப்பைக் குறைத்து, கரோனா தடுப்புக்குக் காவல்துறையினரை ஈடுபடுத்தக்கோரிய வழக்கு!! –அரசு பதிலளிக்க உத்தரவு!

tasmac case highcourt

டாஸ்மாக் கடைகளுக்கான பாதுகாப்பைக் குறைத்து, கரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்புப் பணிகளுக்கு அதிக காவல்துறையினரை ஈடுபடுத்தக்கோரிய வழக்கில், தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கோவையைச் சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவில், கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல கட்ட ஊரடங்கினை அமல்படுத்தி, கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தி வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கரோனா பரவும் என்பதால், கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள், மே மாதம் முதல் மீண்டும் செயல்பட, தமிழக அரசு அனுமதி வழங்கியது.

Advertisment

இதன் காரணமாக,கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர், மதுபானக் கடைகளின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்தில் மொத்தம் உள்ள 5,824 டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பாதுகாப்புகாக 1,827 காவல்நிலையங்களில் உள்ள காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய சூழல் எழுந்தது. குறிப்பாக, ஒரு காவல்நிலையத்தில்இருக்கும் 10 காவலர்களில் 6 பேரை டாஸ்மாக் பாதுகாப்பு பணிகளுக்கும், மீதமுள்ள 4 பேரை கரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்புப் பணிகளுக்கும் தற்போது ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு,போதுமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் இல்லாத காரணத்தால், மக்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. எனவே,டாஸ்மாக் கடைகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினரைகுறைக்க வேண்டும்அல்லதுஆயுதப்படை போன்ற மற்ற காவல் துறையினரை டாஸ்மாக் கடை பாதுகாப்புப் பணிக்கு பயன்படுத்திகொள்ள வேண்டும். அதே வேளையில், மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், கரோனா தடுப்பு மற்றும்பொதுமக்களின் பாதுகாப்புக்கான பணிகளில்அதிக காவல்துறையினரை ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனு தொடர்பாக 2 வாரத்தில் தமிழக உள்துறை, வருவாய்த் துறை செயலாளர்கள்,தமிழக டிஜிபி, டாஸ்மாக் நிர்வாகம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கைத் தள்ளி வைத்தனர்.

highcourt TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe